திமுக காங்கிரசுடன் கூட்டணியை உறுதி செய்து, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளை வழங்கியுள்ளது.
தேமுதிக அதிமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. பாமகவிற்கே 7 சீட் கொடுத்தபோது, தங்களுக்கு 7க்கும் அதிகமான சீட் வேண்டும் என தேமுதிக ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது. ஆனால் அதிமுக இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
இந்நிலையில் திமுக தேமுதிகவிற்கு 3 லோக்சபா சீட்டுகளும் 1 ராஜ்யசபா சீட்டுகளையும் தர முன்வந்திருக்கிறது. ஆனால் தேமுதிக இன்னும் ஒரு லோக்சபா சீட்டை எக்ஸ்ட்ரா கேட்கிறார்களாம். கிட்டதட்ட தேமுதிக - திமுக கூட்டணி உறுதியாகிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.