மருத்துவ கல்லூரிகள், மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி அடையும் வகையில் தமிழ்நாடு அரசு பாடத்திட்டம் மாற்றம் செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் மாணவர்களுக்கு போலியாக தேர்ச்சி அடைய வைக்கப்படுகிறது என்றும் 40 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அடைய மாட்டார்கள் என்பதால் தேர்ச்சி விகிதம் அதிகம் காண்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு போலியான தேர்ச்சி நடைபெறுகிறது என்றும் இந்த மோசடிகளால் மாணவர்களின் தரம் குறைகிறது என்று அவர் குற்றம் காட்டியுள்ளார்.