பெட்ரோலுக்கு பதில் பருப்பு. மத்திய அரசுக்கு இயக்குனர் கரு.பழனியப்பன் யோசனை

வியாழன், 9 மார்ச் 2017 (07:15 IST)
நெடுவாசல் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த 20  நாட்களாக போராடி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


 


இந்நிலையில் பிரபல இயக்குனர் கரு.பழனியப்பன் நேற்று நெடுவாசல் சென்று போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ' மக்கள் அனுமதியில்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என சொல்லும் அரசுகள் தொடர்ந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டு வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்

மேலும் இவ்வாறு அனைத்து நலத்திட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தால், எப்படி பூமியில் இருந்து பெட்ரோல், இயற்கை எரிவயு எடுப்பது என மத்திய அரசின் கேள்விக்கு பதில் கூறிய கரு.பழனியப்பன், 'பருப்பை இங்கே உற்பத்தி செய்துவிட்டு அதில் கிடைக்கும் பணத்தால் பெட்ரோலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாமே' என்று அவர் யோசனை செய்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்