‘’பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள்…’’ இப்படியும் கலாய்ப்பாங்களா…ரவுண்டு கட்டி கலக்கும் மீம்ஸ்
சனி, 24 அக்டோபர் 2020 (19:20 IST)
சமீபத்தில் பெரும்பலூர் அருகேயுள்ள குன்னம் கிராமம்,ஆணைவாரி ஓடை ஆகிய பகுதியில் உள்ள வெங்கட்டான் குளத்தில் சில நாட்களுக்கு முன் டைனோசர் முட்டைகள் போன்ற படிமங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதை ஆராய்வாளர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்கள் சோதித்து அறிந்து உண்மையக் கூற வேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் பெரம்பலூர் பகுதியில் டைனோசர் வாழ்ந்தததால் அதனுடைய முட்டைகள் தான் தற்போதைய எச்சமா என தமிழகம் முழுவதும் மக்கள் பேசிகொண்டிருக்கும்போது, மறுபக்கம் சமூக வலைதளங்களில் மீம்ஸ் இணையதளத்தைக் கலக்கி வருகிறது.