யாரும் ஜெயலலிதாவை தள்ளி கொல்லவில்லை: அடித்து கூறும் திண்டுக்கல் சீனிவாசன்!!

வியாழன், 2 மார்ச் 2017 (18:57 IST)
போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டு, காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் பி.எச்.பாண்டியன்.


 
 
இந்நிலையில், யாரும் தள்ளி விட்டு ஜெயலலிதா மரணம் அடையவில்லை என்றும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியனும் அவரது மகன் மனோஜ் பாண்டியனும் தவறான தகவலை பரப்புகின்றனர் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
 
மேலும், ஜெயலலிதா மரணத்தை அரசியலுக்காக விமர்சிப்பது மனிதாபிமானத்திற்கு விரோதமானது என்று வனத்துறை அமைச்சரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
ஓ.பி.எஸ். வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பி.எச்.பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை தான் வெளி உலகிற்கு கூறுவதாகவும், அதோடு அப்பல்லோ மருத்துவமனையின் சிகிச்சை அறிக்கையை ஆதாரமாக காட்டி பல சந்தேகங்களையும் எழுப்பியது மேலும் ஜெயலலிதா வீடு மற்றும் மருத்துவமனை நுழைவாயில் சிசிடிவி கேமரா பதிவுகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்