திண்டுக்கல்லில் ஆசிரியைக்குக் கொரோனா – இழுத்து மூடப்பட்ட பள்ளி

சனி, 23 ஜனவரி 2021 (16:51 IST)
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு நுழையும் முன் வரை மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சேலத்தில் இரண்டு மாணவ மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல இன்று திண்டுக்கல் மாவட்ரம் பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் அவரின சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளியும் மூடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்