முதல் நாளில் 85% மாணவர்கள் வருகை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

செவ்வாய், 19 ஜனவரி 2021 (19:05 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
 
மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு நுழையும் முன் வரை மாணவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்த நிலையில் மாணவ மாணவிகள் இன்று ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்