தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 37-ஆக உயர்வு!

புதன், 19 ஜூலை 2017 (09:23 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக இருந்த நிலையில் சசிகலா அணி மேலும் உடைந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என இரண்டானது.


 
 
சசிகலா அணியில் இருந்த 122 எம்எல்ஏக்களில் 34 பேர் தினகரன் அணியில் தொடக்கத்தில் இருந்துவந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தினகரன் அணிக்கு தாவினர். இதன் மூலம் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 36 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
 
இந்நிலையில் நேற்று மீண்டும் ஓர் எம்எல்ஏ தினகரன் அணியில் சேர்ந்துள்ளார். தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ ரங்கசாமி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தினகரன் அணி எம் எல் ஏக்களின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. தினகரன் அணியில் 37 பேர் இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்