சசிகலா காலில் விழுந்த திண்டுக்கல் சீனிவாசன்: அசிங்கமாயிடும் என எச்சரிக்கும் தினகரன்!

புதன், 16 ஆகஸ்ட் 2017 (14:05 IST)
டிடிவி தினகரனுக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினருக்கும் இடையேயான மோதல் பேச்சுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தினகரன் திண்டுக்கல் சீனிவாசனின் பேட்டிக்கு பதில் அளித்து விமர்சித்துள்ளார்.


 
 
 மதுரை பொதுக்கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியபோது, இப்போது இருக்கும் இந்த அரசு சசிகலாவால் உருவாக்கப்பட்டது எனவும் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காதீர்கள் எனவும் கூறினார். அதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது ஒரு விபத்து எனவும் அவரை முதல்வராக்கியது சசிகலா எனவும் கூறினார்.
 
இதற்கு நேற்று பதில் அளித்த வனத்துறை அமைச்சர், எடப்பாடி பழனிச்சாமி சூழல் காரணமாக முதல்வராகவில்லை, சசிகலாதான் சூழல் காரணமாக பொதுச்செயலாளர் ஆனார். எங்களை ஏற்றிவிட்ட ஏணி அம்மா மட்டுமே என கூறினார்.
 
இதனையடுத்து திண்டுக்கல் சீனிவாசனுக்கு இன்று பதில் அளித்துள்ளார் தினகரன். அதில், சசிகலாவை விமர்சிக்கும் திண்டுக்கல் சீனிவாசன் அவரால் பெற்ற பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேசட்டும். அவர் சசிகலாவின் காலில் விழுந்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளன, எடுத்துவிட்டால் அவருக்குத்தான் அசிங்கம் என பேசினார்.
 
மேலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகிவிட்டதால் இனி அவரால் அடுத்த தேர்தலில் நிற்கமுடியுமா என்ற பயம் வந்துவிட்டது. எனவே தான் அவர் ஏதேதோ பேசுகிறார் என தினகரன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்