தினகரனின் அமமுக’ AIMIM’ கட்சியுடன் கூட்டணி...3 தொகுதிகள் ஒதுக்கீடு

திங்கள், 8 மார்ச் 2021 (17:48 IST)
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒவைசியின் AIMIM கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது தினகரனின் அமமுக கட்சி.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்கவுள்ளது எனவும், அமமுக கூட்டணி பற்றி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது அமமுகவுடன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இணைந்து சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், தினகரன் தலைமையிலான அமமுக காட்சி ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகளை( வாணியம்படி, கிருஷ்ணாபுர, சங்கராபுரம்) ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில், திரு.அசதுத்தீன் உவைசி M.P., அவர்கள் தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழ்நாட்டில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கீடு. pic.twitter.com/gJeEyhqQSf

— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 8, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்