சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மாஸ்க் அணியாமல் சென்ற பாதசாரிகளிடம் ரூ.100 பராதமும், வாகனங்களில் வந்தால் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் இடை நிறுத்தம் செய்யப்படும். சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முகக் கவசம் எனப்படும் மாஸ்க் மட்டும்தான் அணிந்து வெளியே வர வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருந்த நிலையில், தற்போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், கைக்குட்டை, துப்பட்டா துண்டு ஆகியவற்றை முகக் கவசமாகப் பயன்படுத்ததலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், கைகுட்டை , துப்பட்டா, துண்டு, ஆகியவற்றை முகக் கவசமாகப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.