மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பயணம் - இன்று முதல் அமல்!

புதன், 23 ஜூன் 2021 (11:54 IST)
மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி. 

 
கடந்த திங்கட்கிழமையில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து இயங்கி வருகிறது. பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச மயண்ம என அறிவித்தை போல மாற்றுதிறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் இலவச பயண சலுகையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று முதல் மாநகர மற்றும் நகரப்பேருந்துகளில் இன்று முதல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு டிக்கெட் கட்டணம் இன்றி பயணிக்கலாம். 
 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தங்களது உரிய அடையாள  அட்டையை காட்டி பயண சீட்டை பெற்றுக்கொள்ளலாம். மாற்றுதிறனாளிகளுக்கு சிவப்பு நிறத்திலும், இவர்களது உதவியாளருக்கு நீல நிறத்திலும், திருநங்கைகளுக்கு பிங்க் நிறத்திலும் பயண சீட்டு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்