இந்த கோரிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் தற்போது கூடுதலாக தடுப்பூசிகள் வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்திற்கு கூடுதலாக 6.72 லட்சம் தடுப்பூசிகள் இன்றுவரை உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 2.05 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் என்றும், 4.67 லட்சம் கோவாக்சின் டோஸ்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.