''தோனி ஒரு மஞ்சள் தமிழர்''- தமிழக முதல்வர் ஸ்டாலின்

சனி, 20 நவம்பர் 2021 (19:46 IST)
சென்னை கிங்ஸ் அணியிலேயே தோனி தொடர்ந்து விளையாட வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் -14 வது சீசன் தொடர் நடைபெற்றது. இதில், தோனி தலைமையிலான

சென்னை கிங்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில், சிஎஸ்கே நிர்வாகம் சென்னை கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடத்த தீர்மானித்தது.

இதையடுத்து, இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தோனி தலைமையிலான சென்னை அணிக்கு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது. இதில் பேசிய ஸ்டாலின்,  என் தந்தை, மகன், பேரன் எனை அனைவருமே தோனியின் ரசிகர்கள்.  தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் ஆக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை ஆகிவிட்டார். தமிழ்நாட்டினர் பச்சை தமிழ் என்றால், அவர் மஞ்சள் தமிழர் எனத் தெரிவித்தார். மேலும், சென்னை அணியின் கேப்டன்  தோனி தொடர்ந்து சென்னை அணியிலேயே நீடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்