கடற்கரை செல்ல தடை; மது அருந்தினால் கைது! – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

புதன், 29 டிசம்பர் 2021 (12:57 IST)
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எந்த கடற்கரையிலும் கூட அனுமதியில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டிற்கு மக்கள் கூட அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் புத்தாண்டு மற்றும் அதற்கு முதல் நாளன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுப்பாட்டை மீறி கடற்கரையில் கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31 அன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்