ஆண்டுதோறும் சிவராத்திரி, சித்ரா பௌர்ணமிக்கு மட்டும் வெள்ளியங்கிரி மலையேறி சுயம்புலிங்கத்தை வழிபட பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நாளை மகாசிவராத்திரி நடைபெறும் நிலையில் இன்று முதல் வருகிற 20ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் போருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்வோரிடம் ரூ.20 வசூலித்துக் கொண்டு அதில் ஸ்டிக்கர் ஒட்டி தரப்படும். மலையிலிருந்து கீழே இறங்கும்போது ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை வனத்துறையிடம் ஒப்படைத்து ரூ.20 ஐ திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.