ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி: பிப்ரவரி 13ல் கொடியேற்றம்..!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:24 IST)
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி: பிப்ரவரி 13ல் கொடியேற்றம்..!
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை ஒட்டி பிப்ரவரி 13ஆம் தேதி கொடியேற்ற விழா நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
13ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறும் என்றும் 15 ஆம் தேதி காலை பூத வாகன சேவை நடைபெறும் என்றும் 16 ஆம் தேதி காலை இராவண வாகன சேவை நடைபெறும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
மகா சிவராத்திரியை ஒட்டி நாடு முழுவதும் இருந்தது ஸ்ரீகாளஹஸ்திக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் ஆங்காங்கே தடுப்பு அமைத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் 
 
மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 13 முதல் 25ஆம் தேதி வரை 13 நாட்கள் நடக்கும் என்றும் இருபதாம் தேதி சிவ பார்வதி திருக்கல்யாணம் நடக்கும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்