இதன்படி தமிழகத்தில் ஆத்தூர், சென்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம், பரனூர், வானூர், ஸ்ரீபெரும்புதூர், வாணியம்பாடி, சூரப்பட்டு உள்ளிட்ட 20 சுங்கச் சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கார், ஜீப், போன்ற இலகுரக வாகனங்களுக்கு ரூ.55 இல் இருந்து ரூ.60 ஆகவும், இலகுரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.90 இல் இருந்து ரூ.95 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.