அதன் பின்னர் சசிகலா அணிக்கு தனது ஆதரவை வழங்கி வந்த தீபக் சசிகலாவை சிறையில் சென்றும் சந்தித்து வந்தார். ஆனால் தினகரனின் தலைமையை தீபக் எதிர்த்து வந்தார். இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாகவும், அவரது சொத்துக்கள் அனைத்தும் தனது பெயரிலும் தனது சகோதரி தீபா பெயரிலும் இருப்பதாக கூறினார்.
அதில் குறிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா தனது பெயரில் உள்ளதாக கூறினார். ஏற்கனவே ஜெயலலிதா இருந்த போது அங்கு தீபக்கிற்கு ஒரு அறை இருந்தது. இந்நிலையில் தீபக் தனது குடும்பத்துடன் அங்கு குடியேற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதற்கான நல்ல நாள் பார்த்து சொல்லும்படி ஜோதிடர்களுடன் அவசர ஆலோசனையில் அவர் ஈடுபட்டுள்ளார்.