எம்.ஜி.ஆரை கழட்டிவிட்டது ஏன்? தீபா திடீர் பேட்டி

சனி, 17 ஜூன் 2017 (05:07 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற பேரவை ஒன்றை ஆரம்பித்தார். அதிலிருந்து பிரிந்து அவரது கணவர் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். இந்த நிலையில் தீபா தனது பேரவையின் பெயரை தற்போது மாற்றியுள்ளார். பெரவையில் இருந்து தற்போது எம்ஜிஆர் பெயர் தூக்கப்பட்டு 'அதிமுக ஜெ.தீபா அணி' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



 


இந்த பெயர் மாற்றம் குறித்து தீபா விளக்கமளித்தபோது, 'பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

என் மீது திட்டமிட்டு சிலரால் அவதூறு பரப்பப்படுகிறது. அதிமுகவுக்கு உரிமை கோருவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எங்களுக்கு திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது.

அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது. கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம், எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால் தொண்டர்களின் பலம் எங்களிடம் தான் உள்ளது.

போயஸ் கார்டன் இல்லத்தை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை தற்பொழுது அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இவ்வாறு தீபா கூறினார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்