தினமும் வீணடிக்கப்படும் 2 லட்சம் லிட்டர் குடிநீர்; அதானி நிறுவனம் அட்டூழியம்

வியாழன், 8 ஜூன் 2017 (16:36 IST)
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அதானிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி நிலையத்தின் தேவைக்காக தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சாயல்குடி சாலையில் கவுதம் அதானிக்கு சொந்தமான சூரிய மின்சக்தி நிலையம் உள்ளது. ரூ.4,536 கோடி மதிப்பில் 2500 ஏக்கர் பரப்பளவில் இந்த 648 மெகாட் வாட் கொண்ட உற்பத்தி திறண் கொண்ட சூரிய மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது. இதுதான் இந்தியாவிலே மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம். 
 
இந்த நிறுவனத்தின் தேவைக்காக தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் உறிஞ்சப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதுவும் குறிப்பாக தகடுகளை கழுவ குடிநீர் வீணடிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மக்கள் கடுமையான வறட்சியில் சிக்கியுள்ளனர். மேலும் வரும் 29ஆம் தேதி கமுதியில் மக்கள் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்