கொரோனா லாக்டவுன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதால், 30% பாடங்கள் குறைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி இதேபோல சிபிஎஸ்இ போல தமிழக பாடத்திட்டத்தில் பாடங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது, அரசுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக அல்லாமல், தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த அரசு முடிவு செய்துள்ளது, மேலும், தமிழக பாடத்திட்டத்தில் பாடங்களை குறைப்பது குறித்து திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என்றார்.