முதல்வர் மீது கிரிமினல் வழக்கு. மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்

ஞாயிறு, 18 ஜூன் 2017 (22:34 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பணப்பட்டுவாடா செய்த புகாருக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.



 


ஒரு மாநிலத்தின் முதல்வர் மீதே வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து எழுத்துபூர்வமான எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின், "பணப்பட்டுவாடா செய்த முதல்வர் எடப்பாடி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து நீண்ட நாள்கள் ஆகியும், காவல்துறை இன்னும் வழக்குப் பதியவில்லை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை, மாநகர காவல் ஆணையர் நிறைவேற்ற தவறினால் தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்படும்" என்று கூறியுள்ளார். இதனால் காவல்துறை தரப்பினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்