புதுச்சேரியில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,424-ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வர தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் மேலும் 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,27,424-ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 523 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,25,051 பேர் குணமடைந்துள்ளனர்.