ஓ.பி.எஸ் தம்பிக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் அதிரடி !

வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (08:35 IST)
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவராக செயலபட ஓபிஎஸ்-ன் தம்பி ஓ ராஜாவுக்கு இடைக்காலைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தைப் பிரித்து தனியாக தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அம்மாசி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் ‘மதுரையிலிருந்து தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கடந்த மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. அதற்கு தேவையாக 17 உறுப்பினர் இருந்த நிலையில் 4 பேர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில் மீதமுள்ள 13 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்காமல் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அதிமுகவினராக உள்ளனர். இதனால் அவர்கள் செயல்பட தடைவிதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.

இவ்வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் தலைவர் ஓ ராஜா உள்பட நிர்வாகக் குழுவும் செயல்பட இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் 17 பேரும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்