மனைவியுடன் வாழுமாறு கணவனை கட்டாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

திங்கள், 27 நவம்பர் 2017 (11:45 IST)
கருத்துவேறுபாடு கொண்ட தம்பதிகளிடம் மனைவியுடன் வாழவேண்டும் என்று கணவனையோ அல்லது கணவனுடன் வாழ வேண்டும் என்று மனைவியையோ கட்டாயப்படுத்த முடியாது என்று வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
மதுரையை சேர்ந்த விமான ஒருவர் மீது அவருடைய மனைவி வரதட்சணை கொடுமை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்த விமானி, பின்னர் மனைவி குழந்தைகளுடன் வாழ சம்மதித்தார். இதனையடுத்து அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
ஆனால் முன் ஜாமீன் பெற்ற பின்னர் மனைவி, குழந்தைகளை அவர் கவனிக்காததால் மதுரை நீதிமன்றம் அவருடைய முன் ஜாமீனை தள்ளுபடி செய்தது.
 
இதனையடுத்து விமானி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை விசாரணை செய்து ரூ.10 லட்சம் முன்பணமாக டெபாசிட் கட்டினால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் மனைவியுடன் வாழ கணவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் இது இரு மனங்கள் சம்பந்தப்பட்டது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினார். இந்த முன்பணம், மனைவி மற்றும் குழந்தையின் அவசர தேவைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர்கள் அனுமதி அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்