இந்த புகாரை ஏற்ற போலீஸார் சுரேஷ் தேடிய போது, கோபிக்கு சொந்தமான கார் ஷெட் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சுரேஷ் மற்றும் ஒரு இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரி ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதன் பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணியில், சுரேஷ் - ஜோதிகா காதலித்து வந்ததாகவும். இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என யூகித்துள்ளனர். இதற்கு ஏற்ப காருக்குள் சாக்லெட் கவர்களும் கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.