காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் வெளிஉலக தொடர்பற்று இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் மீதானக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.