தமிழ்நாட்டில் இன்றைய கொரொனா வைரஸ் நிலவரம்

திங்கள், 7 நவம்பர் 2022 (20:26 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரொனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 109 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் மட்டும் இன்று 27 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இதனை அடுத்து தமிழகம் முழுவதும் கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை 973 என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் இன்று கொரொனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று மட்டும் கொரொனா வைரஸால் பாதிப்பு அடைந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்ப வர்களின் எண்ணிக்கை 191 என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்