தமிழகத்தில் குறையும் 3வது அலையின் தாக்கம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (13:33 IST)
தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் உலக சுகாதார மையம் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிர்பார்த்த பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் அதனால் ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை தளர்த்துங்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. 3வது அலையில் 4% மட்டுமே மருத்துவ சிகிச்சைக்கான தேவையுள்ளது என தெரிவித்தது. கொரோனா 2வது அலை 9 வாரங்களில் உச்சம் அடைந்த நிலையில் 3வது வாரத்தில் உச்ச நிலையை அடைந்தது. தற்போது தமிழகத்தில் 1.58 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்