வரம்பு மீறும் தமிழக ஆளுநர்: பாஜகவின் கைப்பாவையாக மாநில அரசு?

புதன், 15 நவம்பர் 2017 (08:49 IST)
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் நடத்திய ஆய்வு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தனது அதிகாரத்தை, சட்டத்தை மீறி செயல்பட்டிருக்கிறார் என குற்றம் சட்டப்படுகிறது.


 
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் தமிழக அரசியல் மத்திய அரசின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது நடைபெற்ற இதற்கு முன்னர் நடைபெற்ற அதிரடி ரெய்டு நடவடிக்கைகள் இதற்கு சிறந்த சான்றாகும்.
 
இந்நிலையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவை மாவட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆளுநர் விதிகளை மீறி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துள்ளார் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
 
தமிழக ஆளுநர் கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பது வரம்பு மீறிய செயலாகும். அரசு விழாக்களில், பட்டமளிப்பு விழாக்களில் ஆளுநர்கள் பங்கெடுப்பது சாதாரணமான ஒன்றுதான்.
 
ஆனால் கோவை மாவட்டத்தில், ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை அழைத்து, திட்டங்கள் அமலாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பது வரம்பு மீறிய செயலாகும். பாஜகவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட கைப்பாவையாகத்தான் மாநில அரசு செயல்படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துக் காட்டுவதாக இந்தச் செயல் அமைந்திருக்கிறது என இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்