ரூ.102 விலை குறைந்த சமையல் எரிவாயு..! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!
சனி, 1 ஜனவரி 2022 (12:13 IST)
நடப்பு மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மாதம்தோறும் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் வேகமாக விலை ஏறி வந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டான இன்று கேஸ் சிலிண்டர் விலையை குறைத்து இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி நடப்பு மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலையில் ரூ.102 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கேஸ் விலை ரூ.2,132 ஆகவும், டெல்லியில் ரூ.1998 ஆகவும் குறைந்துள்ளது.