இந்த துயர சம்பவத்திலிருந்து மீளாத முத்து பேஸ்புக்கில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இறப்பு எல்லாருக்கும் உண்டு என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் என் சின்ன குழந்தை என்ன பாவம் செய்தது. இந்த 2 குழந்த இல்லை என்றால் எப்போது என் மனைவிடம் போய்ருபேன். இவ்வளவு நாள் நண்பர்கள் ஆறுதலினால் ஓடியது வாழ்க்கை இனி........ என்று பதிவிட்டுள்ளார். இதனுடன் மனைவி குழந்தைகளுடனான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவு
அன்புள்ள நட்புக்காக,,,,,,,,
மனைவியிடம் அன்பு காட்டி வாழ்க,
8 ஆண்டுகளில் என் மனைவி இறந்த விடுவாள் என்று தெரியவில்லை, தெரிந்தால் என் அன்பை அதிகம் காட்டிஇருப்பேன்.
இன்னும் கொஞ்சிஇருப்பயேன்.
இறப்பு எல்லாருக்கும் உண்டு என் மனைவிக்கு மட்டும் 30 வயதில் என்
சின்ன குழந்தை என்ன பாவம் செய்தது.
இது கனவாக மாறும் என்று காத்துருந்தென் ஒன்றையும் காண்ல.
என் சின்ன மகள் அம்மா பொருளை எல்லாம் சேர்த்து வைக்கிறாள் அம்மா வந்ததும் தருவாலம் அம்மா ட்ட. என்ன செய்ய,,,,
ஒவ்வொரு நாலும் சாகலம் என்று இருக்கு.
எனக்கு ஒரு விபத்தில் துக்கம் தாஙகம என் மனைவி இறக்க போனால்.
ஆனால் என் மனைவிக்கு அதனையும் செய்யல பாவி நான்.
இந்த 2 குழந்த இல்லை என்றால் எப்போது என் மனைவிடம் போய்ருபென்.
நாள் ஒன்றுக்கு இரண்டு ஆயிரம் மக்களை சிரிக்கவைக்கும் நான் ஒரு நாள் கூட ஒரு நிமிடம் சிரிக்க முடியல....
என் முதல் ரசிகை போய்விட்டால்
அழகிய மனைவி போய்விட்டால்
என் சந்தோசம், மகிழ்ச்சி எல்லாம் ......தொலைந்த்து.....
இவ்வளவு நாள் நண்பர்கள் ஆறுதலினால் ஓடியது வாழ்க்கை இனி........