இந்த நிலையில், இவரது மகள் பொன்னாக்கடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள நிலையில்,இதற்கான கல்லூரி கட்டணம் ரூ.12 ஆயிரத்தை முத்துக்குமார் இரண்டு தவணைகளாகச் செலுத்தியதாகத் தெரிகிறது. குடும்ப சூழ் நிலையில் சிரமத்திற்கு இடையில் மகள் படிப்பிற்கு கல்விக் கட்டண செலுத்துவதை எண்ணி மாணவி மனவேதனை அடைந்துள்ளார்.
இதைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி இறப்பதற்கு முன் ஒரு கடிதம் எழுதிவைத்துள்ளார். அதில், தனது படிப்பு செலவுக்குப் பெற்றோர் செலவுக்காக சிரமப்படுவதால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.