கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் “ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் தொட்டு ஒருநாள் கூட கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மேலும் நான்கு பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும்” என கூறியுள்ளார்.