இன்று எந்தெந்த மாவட்டகாரர்கள் மழையை எதிர்ப்பார்க்கலாம்?

திங்கள், 27 ஏப்ரல் 2020 (11:31 IST)
தமிழகத்தில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பக்ய்திகளில் மழை பெய்து வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
அதன்படி கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறதாம். சென்னையை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யவும் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்