பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த - மாநகர காவல் ஆணையர்....

J.Durai

வியாழன், 7 மார்ச் 2024 (14:39 IST)
கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்:
 
கோவை மாநகரில் குற்றங்களை தடுப்பதற்கு அனைத்து  பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கப்பட்டு வருகிறது. 
 
இதுவரை 4 மாதங்களில் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து கேமராக்களும் சாலைகளை நோக்கி நிறுவப்பட்டுள்ளது.ஏற்கனவே இருக்கக்கூடிய கேமராக்களை ஜியோ டேக்கிங் செய்து அதற்குப் பின்னர் கூகுள் அனாலிசிஸ் செய்து எந்தெந்த பகுதிகளில் கேமராக்கள் தேவைப்படுகிறது என்று தெரிந்து கொண்டு அந்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகி காவல்துறைகளுடன் இணைந்து கேமராக்களை நிறுவி வருகிறோம்.
 
அதன் தொடர்ச்சியாக தான் இந்த கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்யும்போது கேமரா இல்லாத பகுதிகளில் பார்த்து குற்றங்களை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். அதன் அடிப்படையில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
 
கேமராக்கள் பொருத்தப்பட்ட பின் கொலை,கொள்ளை குற்றங்கள் குறைந்துள்ளது.விபத்துக்களை குறைப்பதற்கும் கேமராக்கள் பயன்படுகிறது. மக்களிடத்தில் ஜனநாயகத்தின் நம்பிக்கையை ஏற்படுத்தும் தேர்தலையொட்டி சோதனையை மேற்கொண்டு வருகின்றோம்.
 
பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தனியாக கட்டுப்பாடு விதிக்கப்படும் வருகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறி ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்