கோவையில் கண் விழித்த ஐயப்பன் சிலை! – வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

புதன், 29 டிசம்பர் 2021 (15:46 IST)
கோயம்புத்தூரில் உள்ள கோவில் ஒன்றில் ஐயப்பன் சிலை கண் திறந்ததாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர் செல்வபுரம் தில்லை நகரில் விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் ஐயப்பனுக்கும் தனி சன்னிதானம் உள்ளது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் இந்த சன்னிதானத்தில் பூஜை செய்கின்றனர்.

அந்த வகையில் இந்த கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது ஐயப்பன் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதை அங்கிருந்த சிலர் படம் பிடித்தனர். பின்னர் வீடியோவை பார்த்தபோது அதில் அபிஷேகத்தின்போது ஐயப்பன் சிலையின் கண்கள் மெல்ல திறப்பது போல தெரிந்துள்ளது. இதை சமூக வலைதளங்களில் பலரும் தீவிரமாக ஷேர் செய்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்