சகோதரி பில்கிஸ் பானுவுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு இருக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலின்

Siva

செவ்வாய், 9 ஜனவரி 2024 (11:37 IST)
சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றும், உச்சநீதிமன்றத்தின் கருத்து அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
அஞ்சாமலும், சலிப்பின்றியும், பில்கிஸ் பானு  நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் என கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்,  தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தே கொடும் குற்றவாளிகளை விடுவிக்க பிரேயத்தனம் செய்யும் பாஜக ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்ட கால சிறைவாசிகளை நன்னடத்தை மற்றும் வயது மூப்பு கருதி சட்டபூர்வ முன் விடுதலை செய்ய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைபாட்டை காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்