நிருபரின் கேள்விக்கு பயந்து ஓடிய பன்னீர்செல்வம்: செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்தார்!

வியாழன், 19 ஜனவரி 2017 (13:14 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக கூறி மோடி நழுவிவிட்டார்.


 
 
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசியதை அடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
 
மேலும் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியதாக முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். பின்னர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழியில் நடந்த போராட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தியது குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம் தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என அப்பட்டமாக பொய் பேசினார். இதனையடுத்து நிருபர்கள், தடியடி நடத்தியதை குறிப்பிட்டு ஆதராத்துடன் விளக்க முற்பட்டு அடுத்த கேள்வியை கேட்க ஆரம்பித்ததும் பன்னீர்செல்வம் அங்கிருந்து கிளம்பினார்.
 
பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு கேள்விக்கு சரியான பதிலை அளிக்காமல் அந்த இடத்தில் இருந்து சிரித்துவிட்டு சென்றுவிட்டார். இதனை நேரலையில் பார்த்த மக்கள் முதல்வரின் இந்த செயல்பட்டை விமர்சிக்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்