தமிழக அரசியலில் நடந்த பல்வேறு குளறுபடிகளை அடுத்து யாருமே எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி கே பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலா தரப்போடு ஏற்பட்ட பிணக்குகளால் பன்னீர்செல்வத்தோடு கூட்டனி அமைத்து ஆட்சிசெய்து வருகிறார். இதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு எதிராக டிடிவி சசிகலா மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த 18 எம்.எல்.ஏ.க்களை அதிமுக கொறடா சிபாரிசில் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார்,
இந்த தீர்ப்பில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் 18 எம் எல் ஏக்களையும் குற்றாலத்தில் தினகரன் அடைத்து வைத்திருப்பதாக நேற்று பரபரப்பு தகவல் வெளியானது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ க்களோடு திடீரென ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்த்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் கலந்துகொண்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.