சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

Siva

ஞாயிறு, 1 டிசம்பர் 2024 (12:29 IST)
வங்க கடலில் தோன்றிய புயல் சின்னம் காரணமாக சென்னையில் கனமழை பெய்த நிலையில் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:

* ரங்கராஜபுரம், கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கி உள்ளதால், அழகப்பா சாலை, லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

* பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை, ஸ்ரீ மான் ஸ்ரீநிவாசா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

* திருமலைபிள்ளை சாலையில் மரம் விழுந்ததால், போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அழகப்பா சாலை மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வரும் வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக திரும்பி நாயர் பாயிண்ட் சென்று ஈ.வி.ஆர்., சாலையை அடையலாம்.

 லூப் சாலை மூடப்பட்டது. அவ்வழியாக வரும் வாகனங்கள் சாந்தோம் ஹை ரோடு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்