தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைத்தது. தேர்தலின் போது, டாஸ்மாக் கடைகளின் செயல் நேரம், கடைகளின் எண்ணிக்கையை குறைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, முதல்வராக பதவியேற்ற பின்பு, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தமிழகத்தில், சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 60 டாஸ்மாக் கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.