தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணிக்கும் முன்னாள் அமைச்சரும் தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான தளவாய் சுந்தரத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தங்கமணி காட்டமாக தளவாய் சுந்தரத்தை விமர்சித்ததாக அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
தளவாய் சுந்தரம் பல அமைச்சர்களை தினகரனிடம் போட்டு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தளவாய் சுந்தரத்தால் கட்சியில் ஒருவித குழப்பம் நிலவியே வந்தது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போதும் அராஜகமாக நடந்துகொண்டதாக தளவாய் சுந்தரம் மீது வருமான வரித்துறை காவல்துறையிடம் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போது அமைச்சர் ஜெயகுமார் மாற்றம் தொடர்பாக அமைச்சர் தங்கமணிக்கும், தளவாய் சுந்தரத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தளவாய் சுந்தரத்தை பார்த்து அமைச்சர் தங்கமணி, உங்கள் மாவட்டத்தை நாசம் செய்து விட்டீர்கள். இப்போது கட்சியை நாசம் செய்ய வந்திருக்கிங்களா என்றார்.