சோ ஒரு ஊழல்வாதி, ஜெயலலிதாவிடம் பணம் சம்பாதித்தார்: நடராஜன் மீது ஆத்திரத்தில் பாஜக!

செவ்வாய், 11 ஜூலை 2017 (18:04 IST)
மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி ஒரு ஊழல்வாதி எனவும் அவர் ஜெயலலிதாவிடம் இருந்து பணம் சம்பாதித்தார் எனவும் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளது பாஜக வட்டாராத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமானார். இந்நிலையில் சமீபத்தில் தமிழ் உள்ளிட்ட தேசிய ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்தார். இந்த பேட்டியில் அவர் பேசிய சில கருத்துக்கள் சசிகலா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரையும் கடுப்படைய வைத்தது.
 
அதுமட்டுமல்லாமல் நடராஜன் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி பற்றி கூறிய கருத்து பாஜகவினரை ஆத்திரமடைய வைத்துள்ளது. பத்திரிகையாளர் சோ ஒரு ஊழல்வாதி. அவர் சசிகலாவைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லி பணம் சம்பாதித்தார் என நடராஜன் கூறினார்.
 
பத்திரிகையாளர் சோ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர் ஆவார். அவரைப்பற்றி நடராஜன் இப்படி கூறியது பாஜக வட்டாரத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்