பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான, துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மீண்டும் உடல் குறைவால் பதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்தை அவர் கண்டு களித்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.