63 ஆண்டுக்களுக்கு முன்னரே மாமல்லபுரம் விசிட் அடித்த சீன அதிபர்!

புதன், 9 அக்டோபர் 2019 (15:32 IST)
இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதால் அப்பகுதியில் ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகிறது. 
 
பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும், வருகிற 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளனர். இரு நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசுவதற்காக இருவரும் சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது. ஆனால், எந்தவித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால், சீன அதிபர் சென்னைக்கு வருவது இது முதல் முறை அல்ல. கடந்து 63 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1956 ஆண்டு சீன அதிபராக இருந்த சூ என்லாய் சென்னைக்கு வந்து மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளார். 
 
ஆம், 1956 ஆம் ஆண்டு சீன அதிபர் சூ என்லாய் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை வந்தார். இதன் பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துக்கொண்டார். இதனை தொடர்ந்து ஐசிஎஃப் வளாகத்தை பார்வையிட்டார். இதற்கான பதிவுகள் உள்ளது. 
 
அதன் பின்னர் இறுதியாக மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிட்டு டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்