நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக திடீரென மர்ம காய்ச்சல் குழந்தைகளுக்கு பரவி வருவதாகவும் இதனால் நெல்லை, தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுவரை 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை அடுத்து அந்த பகுதியில் சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி டெங்கு காய்ச்சலும் அந்த பகுதியில் அதிக அளவு பரவி வருவதாக கூறியுள்ள பொதுமக்கள் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.