சென்னை மெரினாவில் குடியரசு தினக் கொண்டாட்டம் – கொடியேற்றினார் ஆளுநர்

சனி, 26 ஜனவரி 2019 (12:18 IST)
70-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி குடியரசுதின விழாவை சிறப்பித்தார்.

இந்திய நாட்டின் 70 ஆவது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆளுநர் பண்வாரிலால் புரோஹித்தை முப்படை வீரர்கள் அணிவகுப்புடன் வரவேற்றனர்.

ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குடியரசு தினவிழாவை ஆரம்பித்து வைத்தார். அப்போது விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பூக்களை தூவிச் சென்றன.

கொடியேற்றத்திற்குப் பின்பு முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.அதன் பின்பு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினா கடற்கரை மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகள் அனைத்துக்கும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்