கொரோனா அதிகரிப்பால் மேலும் சில கட்டுப்பாடுகள்: தலைமை செயலாளர் ஆலோசனை!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:32 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று சுமார் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பதும் தெரிந்ததே 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஏற்கனவே ஒரு சில கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது என்பது தெரிந்ததே
 
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை, ஆட்டோக்களில் இரண்டு பேர்கள் மற்றும் கார்களில் மூன்று பேர்கள் மட்டுமே செல்ல அனுமதி உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்